புதிய கல்வி கொள்கை – கருத்து தெரிவிக்க காலஅவகாசம் நீட்டிப்பு!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்க குடுக்கப்பட்டிருந்த கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தயாரித்த புதிய கல்விக் கொள்கையின் வரைவானது கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்து தெரிவிக்க ஜூன் 30 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், நாடளுமன்றத்தில் திமுக கூட்டணி உறுப்பினர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க கூறி இருந்தனர். அதற்கு பதிலாக ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025