மைதானத்திற்குள் தேனீக்கள் புகுந்ததால் மைதானத்தில் குப்புறப்படுத்த வீரர்கள்!வைரலாகும் புகைப்படம் !

இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆட்டம் தொடக்கத்திலேயே தொடக்க வீரரான திமுத் கருணாரத்ன ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 203ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இப்போட்டியின் போது 48-வது ஓவரில் இலங்கை அணி 194 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டை இழந்து விளையாடி கொண்டு இருந்தது.அப்போது அந்த ஓவரை தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர் மோரிஸ் பந்து வீசினார்.அந்நிலையில் திடீரென மைதானத்துக்குள் தேனீக்கள் புகுந்ததால் மைதானத்தில் இருந்த இரு அணி வீரர்களும் , நடுவர்களும் தங்களை தேனீகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள குப்புறப்படுத்துக் கொண்டனர்.
மைதானத்தில் அனைத்து வீரர்களும் ,நடுவர்களும் குப்புறப்படுத்து இருந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025