#BREAKING : நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகள் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாத பரோல் கோரிய வழக்கில் நளினியை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.வேலூர் சிறையில் உள்ள நளினியை இன்று ( 5ஆம் தேதி) நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினார்.இதன் பின்னர் 6 மாதங்கள் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் நளினிக்கு ஒரு மாத பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025