உலகக்கோப்பை இந்திய கால்பந்து அணியில் ஒரு தமிழச்சி!

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சார்ந்த விசைத்தறி தொழிலாளி பாலமுருகன் இவரது மகள் மாரியம்மாள். இவர் சிறுவயதில் இருந்து கால்பந்து மீது கொண்ட அதிக ஆர்வம் கொண்டு இருந்ததால் இவரது தந்தை பாலமுருகன் நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.
இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் பள்ளி படிப்புடன் சேர்த்து தீவிர கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். தொடக்கத்தில் மாரியம்மாள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதனால் அவர் மாநில அளவிலான போட்டியில் இடம் பெற்றார்.
பின்னர் தனது திறமையால் தமிழ்நாடு அணியில் இடம்பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் பல வெற்றிகள் பெற்றார்.இந்நிலையில் 2020-ம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிஃபா உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.அந்த உலகக் கோப்பை பங்கேற்க உள்ள இந்திய அணியில் மாரியம்மாள் இடம் பெற்று உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025