இஸ்லாமாபாத் :கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். கடந்த ஏப்ரல் 29 அன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில், தாக்குதலுக்கு எப்படி, எப்போது, எங்கு பதிலளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முப்படைகளுக்கு “முழு சுதந்திரம்” இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்தியாவுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், க பாகிஸ்தான் இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தரையில் இருந்து தரைக்கு 120 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்கும் ஃபாட்தே ஏவுகணை சோதனையை இன்று நடத்தியதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை அப்தாலி பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியிருந்தது.
இந்த ஏவுகணையின் தூரம் 120 கிலோமீட்டர் மட்டுமே, இது இந்தியாவின் பிருத்வி-II ஏவுகணை 250 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்தியாவின் ஏவுகணைகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டவை மற்றும் அதிக சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeபஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான மறைமுக மிரட்டல் என பலரும் கருத்து கூறிவருகின்றனர். இருப்பினும், பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைகள் குறித்து இந்தியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
