திருமணமாகி ஒரு வருடத்தில் மாணவி மர்மமான முறையில் தற்கொலை செய்து மரணம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி ஆவார்.இவரது மகள் இந்துமதி ஆவார்.இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்துமதி ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.மேலும் இந்துமதியும் அவரது கணவரும் கல்லூரி அருகே உள்ள எழுத்துக்காரர் தெரு பத்மா காலணியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
மேலும் அவரது கணவர் சதீஷ்குமார் ஒரத்தநாட்டில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வழக்கம் போல் நேற்று வேலைபார்த்து விட்டு இரவு வீட்டிற்கு வந்து அவரது மனைவி இந்துமதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் ஓடி வந்து இந்துமதியின் உடலை மீட்டு கால்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடைப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இந்துமதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025