”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

ஆகஸ்டு 17ம் தேதி மரங்களுக்கான மாநாடு நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

Seeman Trees Summit

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் “மரங்களின் மாநாடு” நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த மாநாட்டின் மூலம், “மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம்” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்த உள்ளார்.

“மரம் மண்ணின் வரம், வளர்ப்பதே மனித அறம்” என்று குறிப்பிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, சீமான் மதுரையில் ஜூலை 10-ம் தேதி அன்று “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ஆடு-மாடுகள் மாநாடு நடத்தியிருந்தார்.

இதில், கால்நடைகளின் மேய்ச்சல் உரிமை, இயற்கை விவசாயம், மற்றும் நவீன வேளாண்மையால் உள்ளூர் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியிருந்தார். இப்பொது, ஆடு-மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, மரங்களின் மாநாடு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு மேலும் ஒரு படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த மாநாடு மீதான விமர்சனங்களும் எழுந்துள்ளன, குறிப்பாக சீமானின் இத்தகைய மாநாடுகள் சில சமூகங்களை மையப்படுத்துவதாகவும், சாதி அடிப்படையில் நோக்கம் கொண்டவையாகவும் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு குற்றம்சாட்டியிருந்தனர். இருப்பினும், சீமான் இத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இயற்கை மற்றும் பாரம்பரிய வாழ்வியலைப் பாதுகாப்பதே தனது நோக்கம் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்