ஷங்கரின் பிரம்மாண்ட படத்தில் அனில் கபூர் நடிக்கிறாரா !

இயக்குநர் சங்கர் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்.இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பிரம்மாண்டமாக இருக்கும்.இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடைசியில் வெளி வந்த “2.0” படமும் பல கோடியை வசூல் செய்தது.
இந்நிலையில் சங்கர் அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து படம் எடுக்க இருக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்ரீ பெரும்புதூரில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஷங்கருடன் அனில் கபூர் இருப்பது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தில் அனில் கபூர் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் பரவியது. இதையடுத்து கமல் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது அணில் கபூர் கமலை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். ஆனால் அனில் கபூர் “இந்தியன் 2 “படத்தில் நடிக்க வில்லை.இந்நிலையில் கமலின் அடுத்த படமான “தலைவன் இருக்கிறான் “படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
July 11, 2025
சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?
July 11, 2025