300 ரன்களுக்கு இங்கிலாந்தை அவுட் ஆக்குங்க…மேட்ச் உங்களோடது! இந்தியாவுக்கு அட்வைஸ் சொன்ன கும்ப்ளே!
இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, இந்திய அணி இங்கிலாந்தை 300 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடி வருகிறது. அதே சமயம், இந்திய அணியும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 251 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 99 *, பென் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 300 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்று , முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். JioHotstar-இன் ‘Match Centre Live’ நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் ஆரம்ப பந்துவீச்சு, குறிப்பாக இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியின் 14வது ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது, இந்தியாவுக்கு முதல் அமர்வில் முன்னிலை அளித்ததாகப் பாராட்டினார்.
இது குறித்து பேசிய அவர் ” நிதிஷ் உயரமானவர். அவர் பந்தை வீசும்போது, கைகள் மேலிருந்து வருவதால், பந்து வேகமாகவும், கூடுதல் உயரத்துடனும் (பவுன்ஸ்) வருகிறது. இது பேட்ஸ்மேனுக்கு (பந்து அடிப்பவருக்கு) கடினமாக இருந்தது.அவர் பந்தை சரியான இடத்தில் வீசினார் – பேட்ஸ்மேனுக்கு அருகில், ஆனால் அடிப்பது கடினமான தூரத்தில். இதனால், டகெட் மற்றும் கிரவுலி தவறு செய்து ஆட்டமிழந்தனர். லார்ட்ஸ் மைதானத்தில் மைதானம் சற்று சாய்ந்திருப்பதால், பந்து இயற்கையாக இடது அல்லது வலது பக்கமாக வளைந்து செல்லும். இது இடது கை வீரரான டகெட்டை குழப்பியது, ஏனெனில் பந்து அவர் எதிர்பார்க்காத திசையில் சென்றது, இதனால் அவர் ஆட்டமிழந்தார்” என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” லார்ட்ஸ் மைதானத்தில், அணிகளை வெறுமனே வீழ்த்த முடியாது; பொறுமை முக்கியம். இங்கிலாந்தை 300 ரன்களுக்கு கீழ் கட்டுப்படுத்தினால், இந்தியா போட்டியில் மேலாதிக்கம் செலுத்தும். ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை விரைவில் உடைப்பது முக்கியம். நிதிஷின் ஆச்சரியமான பந்துவீச்சு மற்றும் பும்ராவின் அழுத்தம், இரண்டாவது நாளில் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்த உதவும். இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இங்கிலாந்தை 300 ரன்களுக்கு கீழ் கட்டுப்படுத்தினால், தொடரில் 2-1 என்ற முன்னிலையைப் பெற முடியும்” எனவும் அனில் கும்ப்ளே தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025