நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த பட தலைப்பு இது தான்!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்கு இயக்கும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு பென்குயின் என்று பெயரிடப்பட்டுள்ளது.