சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்ட கருத்துக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஜபல்பூர் அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை தெரிவித்ததற்காக அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவரது சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இன்றைய தினம் தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் அனுராதா சுக்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அன்படி, இந்த வழக்கில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது 4 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகளை சந்தித்த பின்னர் மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”நான் 10 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். என் சொந்த சகோதரியை விட சகோதரி சோபியா எனக்கு மிகவும் முக்கியம். அவர் நாட்டைப் பாதுகாக்கப் பணியமர்த்தப்படுகிறார்.
நான் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஒரு கலங்கிய மற்றும் சோகமான மனதில் இருந்து ஏதாவது வெளிவந்திருந்தால், நான் அவரிடம் 10 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்” என்று விஜய் ஷா கூறினார்.