குளிரால் வாடும் மாடுகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஸ்வெட்டர் வழங்கி பாதுகாக்கும் உ.பி அரசு!

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. அதனால் அதிகாலை எழுதுகொள்ளவே தென்மாநிலத்தில் நாம் மிகுந்த சிரமப்படுகிறோம். வடமாநிலங்களில் இங்கு இருப்பதை விட குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். அதனால் அதிக பனிமூட்டமும் காணப்படும். இதனால் விபத்துகள், பேருந்து – ரயில் தாமதம் என மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மக்கள் கஷ்டப்படுவதையும் தாண்டி வாயில்லா ஜீவன்களான மாடுகள் குளிரால் கஷ்டப்படுவதை யோசித்து புதிய திட்டத்தை அறிமுப்படுத்தியுள்ளது. அதன் படி மாடுகளுக்கு கோணிப்பைகளினால் ஆன ஸ்வெட்டார் தயாரித்து கொடுக்க உத்திர பிரதேசத்தில் அயோத்தி நகராட்சி திட்டமிட்டு தற்போது செயல்படுத்த தொடங்கியுள்ளது.
அதன் படி, முதற்கட்டமாக 1200 பசுமாடுகளுக்கும், 700 காளை மாடுகளுக்கும் கோணிப்பையினால் ஆன ஸ்வெட்டர் தயாரித்துள்ளது. இதன் தயரிப்பு விலை 250 முதல் 350 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்குழந்தைகள் குளிரால் கஷ்டப்படுகிறார்கள் அவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025