மனைவி இறந்த சோகம் தாங்கமுடியாமல் வளர்த்த நாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்!

Default Image
  • கேரளாவில் மனைவி இறந்த சோகம்தாங்கமுடியாமல் தன் உயிரை மாய்த்து கொண்ட கணவர்.
  • இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் குன்னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரண் ஆவார்.இவர் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம் இருந்த இடத்தில் அருகில் இருந்த படுக்கை அறையில் இவரது மனைவியின் சடலம் இருந்துள்ளது.பின்னர் வீட்டின் பின்புறம் நாய் ஒன்று தலையில் அடித்து இறந்த நிலையில் இருந்துள்ளது.

மனைவியின் சடலத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ,அவர் உடல்நலக்கோளாறினால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.பின்னர் ஸ்ரீதரின் ஆடையில் இருந்து கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

அதில் தமது மனைவி மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் இனி தமக்கு யாரும் இல்லாத காரணத்தால் தான் வளர்த்த நாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரின் ஆதார அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீவைத்து கொளுத்திய நிலையில் காணப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்