பணம் பாதாளம் வரைக்கும் பாயும்! அதேசமயம் பணம் சிறைச்சாலை வரைக்கும் கூட பாயும்! தர்பாரை பாராட்டிய அமைச்சர் ஜெயக்குமார்

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர். இந்த படத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் , இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாகாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசனம் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தர்பார் திரைப்படம் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களை பற்றி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதாவது பணம் பாதாளம் வரைக்கும் பாயும். அதேசமயம் பணம் சிறைச்சாலை வரை கூட பாயும் என்று சசிகலா அவர்கள் சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், திரைப்படங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025