LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் மிட்செல் மார்ஷ் சதமடித்தும், நிக்கோலஸ் பூரன் அரை சதம் விளாசியும் அசத்தினர்.

GT vs LSG

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பவர்பிளேயில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 53 ரன்கள் எடுத்தது. இருப்பினும், ஐடன் மார்க்ராம் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் கிஷோர் அவரை பெவிலியனுக்கு அனுப்பினார்.

ஆனால், தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் நிதானமாக விளையாடி அதிரடியாக சதம் விளாசியுள்ளார். குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் ஓவரில் மட்டும் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களை குவித்து அசத்தினார்.

இருப்பினும், 10வது ஓவரின் ஐந்தாவது பந்தில், சாய் கிஷோர் ஐடன் மார்க்ராமுக்கு பெவிலியன் செல்லும் வழியைக் காட்டினார். இத்துடன், மார்க்ராம் மற்றும் மார்ஷின் 91 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அவர் சிறந்த ஃபார்மில் இருக்கும் மிட்செல் மார்ஷ் 33 பந்துகளில் ஐபிஎல் 2025 இல் தனது ஆறாவது அரைசதத்தை அடித்துள்ளார்.

கடைசியில், மிட்செல் மார்ஷ் 64 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ஷ் தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை அடித்திருந்தார். நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரிஷப் பந்த் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

குஜராத் அணி சார்பாக, அர்ஷத் கான், ஷாய் கிஷோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இறுதியில், லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்துள்ளது. இப்பொழுது, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி குஜராத் அணி பேட்டிங் செய்ய போகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்