எனக்கு நீதி வேண்டும்! நீதி தேடி நீதிமன்றம் சென்ற சனம் ஷெட்டி!

- நீதி தேடி நீதிமன்றம் சென்ற சனம் ஷெட்டி.
- தர்ஷனும் நானும் இரண்டரை வருடம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தோம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது மனதை கொள்ளை கொண்ட தர்சனுக்கும், நடிகை சனம் ஷெட்டிக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் பிரிவு குறித்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. தர்சன் தன்னை ஏமாற்றி விட்டதாக சனம் செட்டி சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘தர்ஷனும் நானும் இரண்டரை வருடம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மாறிவிட்டார். என்னை சந்திப்பதையும் தவிர்த்தார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி உள்ளார். அதில் உண்மை இல்லை. எனது நடத்தையை மோசமாக சித்தரிக்கிறார். என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்க கூடாது என்பதற்காகவே புகார் அளித்தேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், அவரை வைத்து படம் எடுக்கக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. நீ வழக்கு போடு எனக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்று காட்டுகிறேன் என்றார். எனக்கு துரோகம் செய்ததால் கோர்ட்டுக்கு சென்று இருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும். எனது எதிர்காலத்தை அழித்து குடும்பத்தின் நிம்மதியை கெடுத்த அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு நீதி வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025