#Breaking: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை.!

- மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யை அவரது காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. திடீரென இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் அளித்து, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் இன்று மாலை வரை படப்பிடிப்பு நடத்த நிர்வாகம் அனுமதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜயின் மற்றோரு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நெய்வேலியில் நிறுவனத்திற்குள் எட்டு நாள் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் விஜயை அழைத்துச் சென்றதால் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்து சென்ற சம்பவம் சினிமா வட்டாரங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025