5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுதேர்வு ரத்து! நடிகர் தனுஷ் வரவேற்பு!

- 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுதேர்வு ரத்து.
- நடிகர் தனுஷ் வரவேற்பு.
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் பொது தேர்வு நடத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து, இந்த பொது தேர்வு தற்போது ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். ‘5,8-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இது குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும். பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிக்கும். வாழ்த்துக்கள், நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.