INDU19 vs BANU19: கோப்பை யாருக்கு.? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பங்களாதேஷ்.! அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம்.!

Default Image
  • உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom)  நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல் பலம் வாய்ந்த நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் இறுதிச் சுற்றுக்குள் நுழந்ததுள்ளது. இந்நிலையில் இந்திய மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அணி விபரங்கள்: 

இந்தியா யு19 (playing 11): யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா, திலக் வர்மா, பிரியாம் கார்க் (கேப்டன்), துருவ் ஜுரேல் (wk), சித்தேஷ் வீர், அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய், சஷ்வத் ராவத், கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங்.

பங்களாதேஷ் யு19 (playing 11): பர்வேஸ் ஹொசைன் எமோன், டான்சிட் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், தோஹித் ஹிர்டோய், ஷாஹாதத் ஹொசைன், அவிஷேக் தாஸ், அக்பர் அலி (கேப்டன்/wk), ஷமிம் ஹொசைன், ராகிபுல் ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், டான்சிம் ஹசன் சாகிப்.

இதனிடையே ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா 5-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள உற்சாகத்தோடு வங்கதேசம்  பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளது. இந்த போட்டி அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Ranya Rao
Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc