தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை.!

- தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
- மேலும் ஜப்பான், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் விசா தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் ஆண்டு கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொவிட் 19 வைரஸ் பரவி தொடர்ந்து தினமும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்த வைரஸ் தற்போது தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திய வருகிறது.தென்கொரியாவில் 2,022 பேர் கொவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 14 -பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கொவிட் 19 வைரஸ் பாதிப்பு ஜப்பானிலும் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 189 பேர் கொவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரசால் சீனாவில் நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,824-ஐ எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025