தாயகம் திரும்ப முடியவில்லை ! மலேசியாவில் தமிழர் மாணவர்கள் 100 பேர் தவிப்பு

200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் திரும்பமுடியாமல் தாயகம் மலேசியாவில் தவித்து வருகின்றனர்
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனால் கொரோனா பரவிய நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்பமுடியாமல் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டு மார்ச் 15-ஆம் தேதிக்குள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனால் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறியதாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களை மீட்டு இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மலேசிய விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025