வீட்டில் இருக்கும் போது இந்த இரு படங்களையும் பாருங்கள்! – விஜய் ஆண்டனி கோரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய நேரம் தவிர்த்து வேறு எதற்கும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை வலியுறுத்தும் வகையில் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் விழிப்புணர்வு விடீயோக்களை தங்களது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனைவரும் அரசு கூறியதை கேட்டு வீட்டில் இருங்கள், கொரோனா பற்றி இணையத்தில் படியுங்கள், நேரம் கிடைத்தால் ஆங்கில வைரஸ் படமான கன்டேஜியன், மலையாள படமான வைரஸ் ஆகிய படங்களை வீட்டினரோடு பாருங்கள்’ என வீடியோவி
#CORONA ???????? @mrsvijayantony @vijayantonyfilm @FvInfiniti pic.twitter.com/SYq1i49Rjy
— vijayantony (@vijayantony) March 27, 2020
ல் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025