BREAKING: கொரோனா பாதிப்பில் 2-ம் இடம் பிடித்த தமிழகம் .! மத்திய சுகாதாரத்துறை.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,016,310 ஆகவும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,236ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து 213,126 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2301 ஆக உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று தமிழகத்தில் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில் 309 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு 335 பேரும் , கேரளாவில் 286 , டெல்லியில் 219 , கர்நாடகாவில் 124 , ராஜஸ்தானில் 133 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025