கொரோனா வைரஸை உருவாக்கியதே சீனா தான்.! – நோபல் அறிஞர் அதிரடி தகவல்.!

சீனா நாட்டில் உகானில் கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை. செயற்கையாக தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள உகானில் கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானதாக கூறப்பட்ட கொரோனா வைரஸானது, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 1.6 லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரை இந்த நோய் பறித்துள்ளது.
சீனா, உகானில் கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் உருவானதாக கூறப்படுவதை நம்பப்போவதில்லை எனவும், அது புராணக்கதை போன்றது. அக்கதை சாத்தியமற்றது எனவும் பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2008ம் ஆண்டு எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவராவர்.
இவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சீனாவில் உள்ள உகான் தேசிய பயோசேஃப்டி ஆய்வு கூடத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியதாகவும், 2000ஆம் வருட ஆரம்பத்தில் இருந்தே சீனா இத்தகைய வைரஸ்கள் பற்றி ஆராய்ந்து வந்ததாகவும், மேலும், கொரோனா வைரஸ் உகான் சந்தைக்குயில் இருந்து பரவியதாக கூறப்படுவதை தான் நம்பவில்லை எனவும் பேட்டியளித்தார்.