ஸ்பெயினில் ஆச்சரியம் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பி சாதனை புரிந்த சதம் அடித்த பாட்டி…

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 113 வயது மூதாட்டி கொரோனாவின் பிடியில் இருந்து முற்றிலும் குணமடைந்து அசத்தியுள்ளார். ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஓர்லாண்டோவில் உள்ள முதியோர் காப்பகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ரியா பிரன்யாஸ் (113) என்ற மூதாட்டி தங்கியுள்ளார்.
இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தனி அறையில் பல வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தங்கியிருந்த முதியோர் காப்பகத்தில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ஆனால் இவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தார். இதன் மூலம் ஸ்பெயின் நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்ட அதிக வயதுள்ள பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025