69 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு சென்னையில் திறக்கப்டும் சலூன் கடைகள்!

கொரோனா வைரஸ் தொடர் ஊரடங்குக்கு பிறகு சென்னையில் இன்று திறக்கப்படும் சலூன் கடைகள்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்ட நிலையில் தளர்வின் பெயரில் சில கடைகள் திறக்கப்பட்டு கொண்டிருந்தன. இருந்தபோதிலும் சலூன் கடைகளுக்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாகவே சலூன் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னையில் தான் பாதிப்பு அதிகம் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது 69 நாட்களுக்குப் பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20 முதல் 50 வரை கட்டணம் உயர்த்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025