#Breaking: இனி ஆட்டோ, கால் டாக்ஸி ஓடாது.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் ஓடாது.
சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதில், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து தமிழக அரசு ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் உபயோகம் அனுமதிக்கப்படாது.
ஏளினும், அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களின் உபயோகம் அனுமதிக்கப்படும் என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025