பாப்பு, வச்சுடாண்டா ஆப்பு.! செம மாஸ்ஸாக வெளியான ‘காட்டேரி’ பட பாடல்.!

காட்டேரி படத்திலுள்ள ‘என்ன பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்பட்டது.
தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா மற்றும் மங்காத்தா படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதனையடுத்து மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’.திரில்லருடன் காமெடி கலந்த இந்த படத்தை டீகே இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, கருணாகரன், பொன்னம்பலம், மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸின் கீழ் K. E. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ‘என் பேரு என்ன கேளு’ என்ற பாடலின் லிறிக்கல் வீடியோ நடிகை காஜல் அகர்வால் அவர்களால் வெளியிடப்பட்டது இந்த பாடலை ஸ்ரீகாந்த் வரதன் எழுத ஜோனிட்டா காந்தி, மரியா வின்சென்ட் பாடியுள்ளனர். தற்போது அந்த மாஸ்ஸான பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025