ஸ்டாலின் ஆலோசனை கூறியிருக்கிறாரா ? முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலின் ஆலோசனை கூறியிருக்கிறாரா ? என்று முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றார் .இதனிடையே கோவையில் அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி ,காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் என பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனைமேற்கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி.
ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார் கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை.கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025