டெல்லியில் ஒரே நாளில் 2800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 83,077 ஆக அதிகரித்துள்ளது!

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,889 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83,077 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,889 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 83,077ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 3,306 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 52,607 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,623 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 27,847 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025