தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை அரசு மருத்துவமனை – குழந்தைகளுக்கு தீ விபத்து!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்.
தஞ்சாவூர் மிராசுதார் எனும் அரசு மருத்துவமனையில் புதிதாக பிரசவ வார்டு புதிதாக மாடி கட்டடத்தில் கட்டப்பட்டு தற்பொழுது சில நாட்களாக தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிதாக பிறந்த பச்சிளங்குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அந்த பிரசவ அறையின் பின்புறத்தில் மின்னழுத்தத்தின் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரசவ அரைக்கும் புகைமூட்டம் எழும்பியதால் குழந்தைகள் மூச்சு திணறலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதால், மருத்துவமனை நிர்வாகிகள் பெரிதான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025