ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்.? தயாரிப்பாளர் அளித்த பதில்.!

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.தளபதி மற்றும் மக்கள் செல்வனின் காம்போவை பார்க்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது மாஸ்டர் படத்தினை குறித்து கூறியுள்ளார். மாஸ்டர் படம் விஜய்யின் மற்ற படங்களை விட மாறுபட்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதா என்ற கேள்விக்கு மாஸ்டர் ஒரு பெரிய பட்ஜெட் படம் மட்டுமில்லாமல், தளபதி ரசிகர்கள் அவரது படத்தை திரையில் பார்த்து ரசிக்க வேண்டுமென்றே பலரும் விரும்புகின்றனர். எனவே மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை பொங்கல் அல்லது தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் பெரிதும் குஷியில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025