சாத்தான்குளம் தந்தை ,மகன் கொலை வழக்கு – 5 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை இன்று நேரில் ஆஜராகியுள்ளனர்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே இந்த வழக்கினை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.எனவே முதலில் கைதான காவலர்களை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,5 பேரையும் இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் நேரில் ஆஜராகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025