மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும்- தமிழக அரசு!

மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
அந்த பொதுமுடக்கம், ஜூலை 12ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் மதுரையில் ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில், இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025