தனது சம்பளத்தில் ஒரு பகுதியியை குறைக்க இமெல் அனுப்பிய தல அஜித்.!

நடிகர் அஜித் குமார் தயாரிப்பாளர் போனிகபூருக்கு இமெல் மூலமாக தனது சம்பளத்தில் ஒருபகுதியை குறைக்க சொல்லியதாக தகவல்.
தல அஜித் குமார் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த அனுமதி வழங்கியதை அடுத்து, அஜித் அவர்கள் பலரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் பணிகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த காரணங்களை கருத்தில் கொண்டு மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கும் பட்சத்தில் தயாரிப்பாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடிகர்களும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை தொடர்ந்து சில நடிகர்கள் தனது சம்பளத்தை குறைப்பதாக அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் தற்பொழுது நடிகர் அஜித் குமார் தயாரிப்பாளர் போனிகபூருக்கு இமெல் மூலமாக தனது சம்பளத்தில் ஒருபகுதியை குறைக்க சொல்லியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025