#BREAKING: திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன்.!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் கோவில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது.
இதையடுத்து, லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டபோது ஒரு குண்டு காரிலும் மற்றொரு குண்டு ஸ்ரீனிவாசன் என்பவர் முதுகில் பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உட்பட 11 பேரும், எதிர்தரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு வழக்கில் திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். சிறையில் உள்ள இதயவர்மன் உட்பட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதயவர்மன் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 3 லட்சம் நன்கொடையாக அளிக்கவும், வேலூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இதயவர்மனுடன் கைதான 10 பேர் திருப்போரூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025