கண்ணம்மாபேட்டைக்கு புறப்பட்ட ஜெ.அன்பழகனின் உடல்.!
கொரோனா தோற்றால் உயிரிழந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக பிரச்சனைக்கு சிகிக்சை பெற்று வந்தார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு [...]