#BREAKING: கேரள விமான விபத்து ! இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இந்தியர்கள் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025