காந்தி சிலை முன் பதாகைகளை ஏந்தி இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.!

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் விவாசயிகளுக்கு எதிரான அவசர சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்ட கூட்டத்தொடரில், மறைந்த எம்.பி வசந்தகுமாருக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, பின்னர் அவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை கூட்டத்தொடர் மாலை நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இடதுசாரி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சில முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். மேலும், வேளாண் மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.