நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா காலமானார்..!

நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா விஜய் நடித்த புதிய கீதை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து கும்கி, கயல், தொடரி, பொதுவாக எம்மனசு தங்கம் போன்ற சுமார் 50 படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 67 வயதான நடிகர் ப்ளோரன்ட் பெரைரா சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இவரது மறைவிற்கு சினிமா சார்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.