தங்கம் விலை சவரனுக்கு 288 உயர்வு..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.39,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து மற்றும் குறைந்து கொண்டே தான் வருகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.39,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஆபரண வெளியின் விலையிலிருந்து 1.ரூபாய் உயர்ந்து 71.30 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.