எம்.பிக்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்.!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே எம்.பி.க்கள் சம்பளம் 30 சதவிகிதம் குறைப்பு உள்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி அவசர சட்டமும் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, அந்த அவசர சட்டத்துக்கு பதிலாக, நடாளுமன்ற மக்களவையில் எம்.பி.க்கள் சம்பளம், இதர படிகள், ஓய்வூதியம் திருத்த மசோதாவை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கல் செய்து பேசினார். அப்போது, மேலும் ஓராண்டு காலத்துக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில், தற்போது, எம்பிக்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க எம்.பி.க்களின் ஊதியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025