வெளியானது இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை – அண்ணா பல்கலைக்கழகம்

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
அண்ணா பல்கலைக்கழக்கத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 24-ம் தேதி தொடங்கும் என்றும் ஆன்லைன் முறையில் இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வுக்கான அட்டவணையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பயிற்சி தேர்வு நடைபெறும். 24ம் தேதி முதல் 29-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக் கூடிய வகையில் ஒரு மதிப்பெண் வினா கொண்டதாக கேள்விகள் இடம்பெறும். 40 கேள்விகள் கேட்கப்படும், அதில் 30 கேள்விகளுக்கு அதாவது 80 சதவிகிதம் மட்டும் விடை அளித்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடைபெறும் என்றும், இணையதள வினாத்தாளில் மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தேர்வுகளை எழுதி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை தொடர்பான விவரங்களுக்கு தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025