பந்துவீச்சில் மிரட்டிய சென்னை.. 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர்!

ஐபிஎல் தொடரின் 44 ஆம் போட்டியில் சென்னை அணிக்கு 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெறும் 44 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் அணி மோதி வருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் படிக்கல் – பின்ச் கூட்டணி களமிறங்கியது. இருவரும் நிதானமாக அடிவர, 15 ரன்களில் பின்ச் தனது விக்கெட்டை இழக்க, அவரையடித்து 22 ரன்கள் அடித்து படிக்கல் வெளியேறினார். அதன்பின் கோலி – டி வில்லியர்ஸ் கூட்டணி களமிறங்கி அதிரடியாக ஆடிவந்தனர்.
பின்னர், 39 ரன்கள் அடித்து டி வில்லியர்ஸ் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய மொயின் அலி, 1 ரன் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து அரை சதம் அடித்து கோலி வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது.
146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் சென்னை அணியின் சாம் கரண் தலா 3 விக்கெட்களும், தீபக் சாஹர் தலா 2 விக்கெட்களும், சான்டனர் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025