காஷ்மீரில் பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீர் மாநிலம், பக்தாம் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பக்தாம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், அப்பகுதியியல் ரகசிய சோதனை நடத்தினார்கள். அப்பொழுது அங்கிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள், எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025