மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார் பூங்கோதை..?

நேற்று முன்தினம் நள்ளிரவு அதிக அளவிலான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு பூங்கோதை ஆலடி அருணா முயன்றுள்ளார். நேற்று காலை அவர் அறையில் மயக்க நிலையில் இருந்த பூங்கோதையை அவரின் குடும்பத்தினர் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக இன்று பூங்கோதை சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டுநடைபெற்ற தேர்தலிலும் திமுக எம்எல்ஏவாக பூங்கோதை ஆலடி அருணா தேர்வு செய்யப்பட்டார்.
இவரது தந்தை ஆலடி அருணா மூன்று முறை ஆலங்குளம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025