#BreakingNews : புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் தாக்கம் தொடரும் – வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் தாக்கம் தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடலூருக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 250 கி.மீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.மணிக்கு 11 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து அதிதீவிர புயலாக வலுப்பெற்று ,வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்கக்கூடும்.தற்போதைய நிலவரப்படி, புயல் கரையை கடந்த பிறகு , கடலோர மாவட்டங்களில் அதனுடைய வலுவானது 6 மணி நேரத்திற்கு தொடரும்.அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும். நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும். இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025