சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்ஜீப் பானர்ஜி

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி பதவியேற்றார்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.அதன்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்து வந்தார்.கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியுடன் இவர் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆகவே புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்தது.கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இதனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி இன்று பதவியேற்றார்.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சஞ்ஜீப் பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025