முதல் படமே அப்பாவை வைத்து இயக்குகிறாராமே இளைய தளபதி.!உறுதி செய்த விஜய் மகள்.!

தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தினை இயக்க விஜய்யின் மகனான சஞ்சய் திட்டமிட்டு வருவதாக திவ்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் .இதனை தொடர்ந்து அவரது 66-வது படத்தினை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.அதற்காக பல இயக்குனர்கள் போட்டியிட்டும் வருகின்றனர்.அந்த வரிசையில் விஜய்யின் மகனான சஞ்சய்யும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம் சஞ்சய் தனது அப்பாவை வைத்து படத்தினை இயக்க ஆசைப்படுவதாகவும் ,அதற்கு விஜய் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்து .தற்போது அதனை விஜய்யின் மகளான திவ்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் .அதில் தனது சகோதரர் அப்பாவை வைத்து ஒரு படத்தினை இயக்க திட்டமிட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார் . இதிலிருந்து தளபதியின் அடுத்த படத்தினை சஞ்சய் இயக்கி சினிமாவில் என்டரி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை முடித்துள்ள சஞ்சய் ஏற்கனவே குறும்படம் ஒன்றை இயக்கியதும் ,அது வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Brother planning to make a film direction with my dad.???? official announcement coming soon ???? @actorvijay
— Divya Shasha Vijay ???? (@shasha_vijay) February 16, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025