பெரிய தொகை கொடுத்து ‘கர்ணன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா.?

கர்ணன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் நிறுவனமான ஜீ தமிழ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
சமீபத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஏப்ரல் 9-ம் திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.மேலும் கர்ணன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.பாடல்களை கண்ட ரசிகர்களைடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.எனவே படத்தினை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் .இந்த நிலையில் கர்ணன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் நிறுவனமான ஜீ தமிழ் அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே பல தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாவும்,கடைசியில் ஜீ தமிழ் கர்ணன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
July 11, 2025
சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?
July 11, 2025